காகிதநகர் சமுர்த்தி பிரிவால் 2023 சர்வதேச மகளிர் தினம்-Battieye.blogspot.com
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகிதநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு (14) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களுடன் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் முன்மாதிரிமிக்க குடும்பங்களை உருவாக்குவதில் மகளிரின் பங்களிப்பு என்னும் கருப்பொருளில் ஏ.எல்.எம்.பைரூஸ் அவர்களினால் விசேட விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் CBO அங்கத்தவர்களின் கவிதை, பாட்டு போன்ற நிகழ்வுகளைப் இடம்பெற்றது. இறுதியில் சமூக அபிவிருத்திற்கு பங்களிப்பு செய்த மகளிர்களும் பலர் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment