சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் '125 வது ஆண்டு' ஓராண்டு தொடர் விழாவின் நிறைவு நாள் நிகழ்வு:Battieye.blogspot.com

 சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் '125 வது ஆண்டு' ஓராண்டு தொடர் விழாவின் நிறைவு நாள் நிகழ்வு:Battieye.blogspot.com

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் '125வது ஆண்டு' ஓராண்டு தொடர் விழாவின் நிறைவு நாள் நிகழ்வு மட்டக்களப்பில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது.

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் '125வது ஆண்டு' ஓராண்டு தொடர் விழாவின் நிறைவு நாள் நிகழ்வு இன்று (06) திகதி மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கான ராமகிருஷ்ண மிஷன் கிளைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் தலைமையில் இடம்பெற்றது.

ராமகிருஷ்ண மிஷன் வளாகத்திலிருந்து பிரதம அதிதிகள் உள்ளட்ட அதிதிகளுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டது, பண்ட் வாத்திய இசை முழங்க வரவேற்பு வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து, சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடந்து, பிரதான அரங்க நிகழ்வுகள் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டத்தில் இடம்பெற்றது.

வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரையினை தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் இலங்கைக்கான விஜயம் எனும் தலைப்பில் மாணவர்களினால் கூத்து அரங்கேற்றப்பட்டதுடன், சுவாமி விவேகானந்தரின் இலங்கைக்கான விஜயத்தின் 125வது தொடர் விழா கொண்டாட்டம் எனும் தலைப்பில் கானொளிக்கண்காட்சியும், கலார்ப்பனா நாட்டிய நிலையத்தின் அழகிய கண்கவர் நடனம் அரங்கேற்றப்பட்டதுடன், பிரதம அதிதி உரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து, விழிபுலன் அற்றவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சமூக நல உதவித்திட்டங்கள் என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவி பொதுச்செயலாளர் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்தஜி மஹராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்திருந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உலகளாவிய ராமகிருஷ்னமிஷன் மற்றும் மடங்கள், இந்தியா - பேலூர் தலைமையகத்தின் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சத்யேஷானந்தஜி மஹராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.




Comments