VMD நிறுவனம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது: Battieye.blogspot.com

 VMD நிறுவனம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது: Battieye.blogspot.com

யுனிலிவர் (Unilever) நிறுவனாத்தால் கில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் சிறந்த விநியோகஸ்தர்களுக்கான 2022ம் ஆண்டுக்கான முதல் விருதை மட்டக்களப்பு VMD  நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு (28) அன்று கொழும்பில் நடைபெற்றது. இதன் போது VMD  நிறுவனத்தின் ஸ்தாபகர் சண்முகம் காசிப்பிள்ளை அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது அவ்விருதை VMD உரிமையாளரான காசிப்பிள்ளை சதீஸன் பெற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பில் பல வருட காலமாக சிறப்பான முறையில் தம் சேவையை விநியோகஸ்தர்களாக செயற்பட்டு வரும் VMD நிறுவனம், தன் ஊழியர்களின் அயராத முயற்சியின் பயனாகவும், கடின உழைப்பின் பயனாகவும் இவ்விருதை தட்டிச் சென்றுள்ளனர்.

சன்முகம் காசிப்பிள்ளை அவர்கள் தன் சிறு வயது முதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும், பிற்காலங்களில் வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (VMD) நிறுவனத்தை ஆரம்பித்து தன் முயற்சியால் முன்னேறிய ஒரு சிறந்த முயற்சியாளர் ஆவார். அதே பாதையில் தம் புத்திரரான காசிப்பிள்ளை சதீஸன் அவர்களையும், புத்திரியான காசிப்பிள்ளை வித்தியா அவர்களையும் இணைத்துக் கொண்டு தற்போது (VMD) நிறுவனத்தை முன்னோக்கி வெற்றி பாதையில் பயணித்தே இவ்டவிருதை பெற்றுள்ளார்.

சண்முகம் காசிப்பிள்ளை, காசிப்பிள்ளை சதீஸன் மற்றும் காசிப்பிள்ளை வித்தியா ஆகியோர் கோட்டைமுனை விளையாட்டு கழக்தின் அங்கத்தவர்கள் என்பதில் பெருமை கொள்கின்றோம். அதே போல் சண்முகம் காசிப்பிள்ளை அவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர் சபையின் பிரதிநிதியாகவும், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்கின்றார்.









Comments