மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.....
மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.....
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து கிழக்கிலங்கை மனிதவள, பொருளாதார அபிவிருத்தி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு மண்முனைப்பற்று சர்வ மத ஒன்றியத்தின் அனுசரணையில் ஆரையம்பதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (08) இடம்பெற்றது.
இதன் முதற்கட்ட மாணவர்களுக்கான கருத்தரங்கு, மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆரையம்பதி, காங்கேயனோடை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் அமைந்துள்ள 11 பாடசாலைகளில் கல்வி பயிலும், தெரிவு செய்யப்பட்ட 45 மாணவர்கள் பங்குபற்றினார்கள். இவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அளிக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment