4 K 100g கஞ்சாவுடன் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது......
4 K 100g கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருத்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணும், மீட்கப்பட்ட கஞ்சா பொதியும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment