மட்டு.சிவாநந்தா தேசிய பாடசாலை 2001ம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களது ஒன்றுகூடல்:Battieye.blogspot.com
மட்டு.சிவாநந்தா தேசிய பாடசாலை 2001ம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களது ஒன்றுகூடல்: Battieye.blogspot.com
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 1998 ஆண்டு சாதாரண தரம் மற்றும் 2001 ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களது, சிவாநந்தியன் சக பாடிகளின் வருடாந்த திட்ட இணைப்பாளர்களின் மூன்றாவது ஒன்று கூடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மூன்றாவது வருட ஒன்று கூடல் நிகழ்வினை தொடர்ந்து சமூகத்திற்கு சிறந்த திட்டம் அமுலாக்குனர்களாகச் செயற்பட்ட சகபாடிகளை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
ஒன்றுகூடல் நிகழ்வின் மூன்றாவது வருடத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர் கமலதாஸ் கௌரவிக்கப்பட்டதோடு, சிவாநந்திய சக பாடிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சாக பாடி ஒருவருக்கான முச்சக்கர வண்டியும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவர் வி.வாசுதேவன், செயலாளர் சாய்ராஜன் மற்றும் சகபாடிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment