அவதார் - அடுத்த பாகங்களையும் தயாரிக்க போவதாக ஜேம்ஸ் கேமரூன் உறுதி...!!

 அவதார் - அடுத்த பாகங்களையும் தயாரிக்க போவதாக ஜேம்ஸ் கேமரூன் உறுதி...!!

அவதார்: தி வே ஆப் வாட்டர் டிசம்பர் 16 2022 அன்று வெளியிடப்பட்டது. உலக அளவில் இந்தப்படம் 1.5 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் நிச்சயம் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் உறுதி அளித்துள்ளார். மேலும் ஜேம்ஸ் கேமரூன் அவதார் வே ஆப் வாட்டர் லாபகரமானது என்றும் 3 பாகங்ககளின் தொடர்ச்சிகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் குறிப்பிடுகையில் இதில் இருந்து என்னால் வெளியேற முடியாது மேலும் அடுத்த 6 அல்லது 7 வருடங்களில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும் என கூறி உள்ளார். ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தின் 5 பாகங்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளார். அவற்றில் இரண்டை முழுமையாக படமாக்கியுள்ளார். இந்நிலையில் அவதார் 3, அவதார் 4 படத்தின் சில பகுதிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

கேமரூனின் திட்டத்தின் படி நடந்தால், 'அவதார் 4' தயாரிப்பை முடித்து, 'அவதார் 5' முழுவதுமாக படமாக்கப்படும். அவதார் வரிசையின் அடுத்த படத்தின் தலைப்பு அவதார் 3  தி சீட் பேரர் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று தலைப்புகளில் இது மிகவும் தனித்துவமான தலைப்பு மற்றும் இதைப் பற்றி யாரும் யூகிக்க முடியாது. நான்காவது தி துல்கின் ரைடர் என்றும் ஐந்தாவது தி குவெஸ்ட் பார் எய்வா என்றும் கூறப்படுகிறது.

68 வயதான கேமரூன் தனது வாழ்நாள் முழுவதும் 'அவதார்' திரைப்படங்களை மட்டுமே இயக்குவார் என்று கூறினாலும் மிகையில்லை.

Comments