ஏழு வயதில் சதுரங்க போட்டியில் சாதனை படைத்த மிக்கல் கல்லூரியின் சம்சன் ஆயூஸ்மான்.....

 ஏழு வயதில் சதுரங்க போட்டியில் சாதனை  படைத்த மிக்கல் கல்லூரியின் சம்சன் ஆயூஸ்மான்.....

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் சம்சன் ஆயூஸ்மான் Commonwealth Chess Championship 2022 சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு குறைந்த வயதில் சாதனை படைத்த வீரராக திகழ்கின்றார்.

சம்சன் ஆயூஸ்மான் அவர்கள்  Fide International Ratingஐ தற்போது ஆரம்பித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் போட்டியில்  வயது குறைந்த வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் அண்மையில் நடைபெற்ற Commonwealth Chess Championship 2022 சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு 9 போட்டிகளில் பங்குபற்றி 4 1/2 புள்ளிகளைப் பெற்று சாதனை வெற்றியை பதிவிட்டுள்ளார். இவர்  எதிர் வரும் 3ம் திகதி நடைபெறவுள்ள ஆசிய பாடசாலைகளுக்கான சதுரங்க சுற்றுப்போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் பங்குபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இது மாத்திரமின்றி  கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த  முதலாவது வீரராகர் இவர் இப்போட்டியில் பங்குபற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Comments