கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சீன அரசு சோலார் விளக்குகளை வழங்கியது......

 கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சீன அரசு சோலார் விளக்குகளை வழங்கியது......

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு சூரிய மின் (Sollar power) விளக்குகள் வழங்கும் விசேட நிகழ்வு திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த  (08)ம் திகதி இடம்பெற்றது. 

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்  வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhehong Hong இந்த விளக்குகளை வழங்கியுள்ளார். சீனாவின் யுன்ஹான் மாகாண மக்கள் சங்கத்தினரின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 40 பாடசாலைகளுக்கு இந்த சூரிய மின் விளக்குகள் விநியோகிக்கப்படவுள்ளன. 

இதன் பொருட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 14 பாடசாலைகளை ஆளுநர் மற்றும் சீனத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹூ வெய் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்வுக்கு முன்னதாக ஆளுநருக்கும் சீனக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு சூரிய மின் விளக்குகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க, திருகோணமலை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், சீனத் தூதரக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


Comments