மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவக ஊழியர்களுக்கிடையிலான ஒளிவிழா போட்டி நிகழ்வு!!

 மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவக ஊழியர்களுக்கிடையிலான ஒளிவிழா போட்டி நிகழ்வு!!

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவக ஊழியர்களுக்கிடையிலான ஒளிவிழா போட்டி நிகழ்வு (02)ம் திகதி இடம்பெற்றது.
இயற்கை மற்றும் கழிவு பொருட்களை கொண்டு கிறிஸ்மஸ் நிகழ்வினை பிரதிபலிக்கும் வகையில் கரித்தாஸ் எகெட் நிறுவக ஊழியர்களினால் தயாரிக்கப்பட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவைகளுக்கு நடுவர் குழாத்தினால் புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், வெற்றியாளர்களுக்கான பரிசுகள் கரித்தாஸ் எகெட் நிறுவகத்தினால் நடாத்தப்படவுள்ள ஒளிவிழா நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மன அழுத்தங்களை குறைக்கும் ஒரு செயல்பாடாக கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்பணி ஏ.ஜேசுதாசன் அடிகளாரின் ஆலோசனைக்கு அமைவாக கிறிஸ்மஸ்சினை முன்னிட்டு ஒளிவிழா நிகழ்வினை ஆயத்தம் செய்யும் வகையில் கரித்தாஸ் எகெட் நிறுவக ஊழியர்களின் பங்களிப்புடன் ஊழியர்களின் ஆக்கத்திறன் ஒளிவிழா போட்டி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Comments