போரதீவுப்பற்று பிரதேசத்தில் பாாிய டெங்கு சிரமதானபணி .....

 போரதீவுப்பற்று பிரதேசத்தில் பாாிய டெங்கு சிரமதானபணி  .....

    போரதீவுப்பற்று பிரதேச செயலாளா் ஆா்.ராகுலநாயகி  அவா்களின் பணிப்புரைக்கமைவாக வெல்லாவெளி பிரதான வீதி தொடக்கம் பட்டிருப்பு பாலம் வரைக்குமான பாாிய சிரமதான பணியை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பாதையில் இருமருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக்  வெற்று போத்தல்கள், பொலித்தின் பைகள் மற்றும் குப்பைகள்   போன்றன அப்புறப்படுத்தப்பட்டடதுடன், பல டெங்கு  பரவக்கூடிய தாக நீா் தேங்கி காணப்பட்ட   பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, கால்வாய்கள் துர்வாரப்பட்ட  நடவடிக்கைள் மேற் கொள்ளப்பட்டன.   இதன் போது     பிரதேச சபையால்  கழிவுகளை ஏற்றிச்செல்வதற்கான இயந்திரங்களை இதன் போது வழங்கி இருந்தது.  போரதீவு பற்று பிரதேச செயலாளா் ஆா்.ராகுலநாயகி அவா்களின் ஆலோசனைக்கு அமைவாக சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தா்,  சமுா்த்தி முகாமைத்துவ பணிப்பாளா், சமுா்த்தி முகாமையாளா்கள், சமுா்த்தி உத்தியோகத்தா்கள்.  சுகாதார பிாிவினா் பிரதேச சபை ஊழியா்கள் இவ் சிரமதான பணியின்    போது  கலந்து கொண்டனா்.






Comments