விளையாட முடியாத முக்கிய மைதானங்ககளை அடுத்த ஆண்டு புனரமைப்பு திட்டம்.....

 விளையாட  முடியாத முக்கிய மைதானங்ககளை அடுத்த ஆண்டு புனரமைப்பு  திட்டம்.....

 விளையாட முடியாத நிலையில் உள்ள முக்கிய மைதானங்ககளை புனரமைப்பு திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக புனரமைக்கப்பட்ட மைதானங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சினால் கிடைத்த முறைப்பாடுகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் கண்டியில் உள்ள போகம்பர மைதானத்த (04) பார்வையிடவுள்ளனர், அந்த அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யூ.யு.குலசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

போகம்பரா மைதானத்தில் கால்பந்து மற்றும் ரகர் மைதானம் கட்டுமானம் முடிவடைந்தது ஆனால் இந்த மைதானத்தை உபயோகிப்பது சாத்தியமற்றதாகி விட்டது என  செயலாளர் கூறினார்.

போகம்பர மைதானத்தில் உள்ள நீர் மிக குறுகிய காலத்தில் அகற்றப்பட்டாலும் முற்றாக அகற்றப்படாத நிலை இங்கு அவதானிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மைதானத்திற்கு பயன்படுத்தப்படும் புல் வகை வீரர்களுக்கு வசதியாக இல்லை என சுட்டிக்காட்டிய செயலாளர், விளையாட்டு வீரர்களை சிரமப்படுத்தாமல் இருப்பதே தனது பொறுப்பு என்றும் கூறினார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனையின் பேரில் கண்காணிப்பு இடம்பெறும் என்றும் அடுத்த வருடம் மைதான விளையாட்டுகளை விளையாட உகந்ததாக மாற்றுவதாகவும் மேலதிக செயலாளர் டபிள்யூ. யு. குலசூரிய கூறினார்.







Comments