Crescent Instituteயின் 555 மாணவர்களுக்கு பாராட்டு.....
(எம் .எஸ். எம். சஜி)
காத்தான்குடி Crescent Instituteயின் 2022ம் ஆண்டுக்கான மாணவர் பாராட்டு விழா நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம் பெற்றது.
Crescent Instituteயின் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.றிஸ்வி தலைமையில் Crescent Instituteயின் இயக்குனர் சிபானி றிஸ்வியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் பங்கேற்று சிறப்பித்தார்.
வைபவத்தில் கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அருட் தந்தை ஏ.ஏ. நவரத்னம் நவாஜி, EduGate Globalயின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் உள்ளிட்ட கல்வியாளர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இதன்போது மாணவர்களின் நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் இவ்வருடத்தில் 555 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment