இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய மட்டு புனித மிக்கல் கல்லூரி......

 இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய மட்டு புனித மிக்கல் கல்லூரி......

திருகோணமலை TRINCO BOYS  விளையாட்டுக்கழகத்தின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளுக்கு இடையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான T/20 கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியில் விளையாடுவதற்காக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தெரிவாகியுள்ளது. 

(07)ம் திகதி  அன்று நடைபெற போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியும், திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியும் அரையிறுதி போட்டியில் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடி புனித மிக்கல் கல்லூரி 20 ஓவர்களில் 03 விக்கெட்டக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் புனித மிக்கல் கல்லூரி சார்பாக அணித்தலைவர் லதுர்சன் ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 40 ஓட்டங்களையும், அபிலாசன் 33 பந்துகளில் 31 ஓட்டங்களையும், அபுர் ஹரிஸ் 35 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் திருகோணமலை சென் ஜோசப் கல்லூரி சதுஸ்கரன் 21 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், கிசோத் கொட்வின் 30 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டையும்யும் கைப்பற்றி இருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை சென் ஜோசப் கல்லூரி 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை  பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் மதுமிதன்  20 பந்து வீச்சில் 22 ஓட்டங்களையும், அப்சல் ஆட்டமிழக்காமல் 23 பந்து வீச்சில் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் புனித மிக்கல் கல்லூரி சார்பாக சதுர்ஜனன் 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், தனுசன் 09 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர் இதன் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி 46 ஓட்டங்களால்  வெற்றியை பதிவிட்டு இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. 

Comments