மட்டக்களப்பில் நடைபெறவுள்ள திரைப்பட உருவாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறை.....

 மட்டக்களப்பில் நடைபெறவுள்ள திரைப்பட உருவாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறை.....




'களரியில் நாம்' எனும் தலைப்பில் திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகள் பற்றிய பயிற்சிப்பட்டறை ஒன்று  07-11-2022 திங்கட்கிழமை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுட்பமான கலை மற்றும் கலாசார நிறுவனம் (Institute of Subtle Art and Culture -ISAC)  மற்றும் 'அ' கலையகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் கதை எழுதுதல் (Script Writing), திரைக்கதை எழுதுதல் (Screenplay Writing), தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ள இப் பயிற்சிப் பட்டறையில்  'ஆறாம் நிலம்' உட்பட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை இயக்கிய ஆனந்தரமணன் அவர்கள் விசேட உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இவ்வாறான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுகின்ற நிலையில் இந்தப் பயிற்சிப்பட்டறை திரைத்துறையில் ஆர்வம் கொண்ட பல இளைஞர் - யுவதிகளுக்கு மிகுந்த பயனுடையதாக அமையும் எனத் தெரிகிறது.

இதில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் 076 900 6638 எனும் இலக்கத்தில் தொடர்பு கொண்டு உங்களுக்கான ஆசனத்தை முற்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சிப்பட்டறை நடைபெறும் இடம் உள்ளிட்ட ஏனைய விபரங்களையும் குறித்த தொலைபேசி இலக்கம் மூலமாக அறிந்துகொள்ளலாம்.


Comments