நெட்பிளிக்ஸ், சிகரெட், சாப்பாடு... ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாஃப்........

 நெட்பிளிக்ஸ், சிகரெட், சாப்பாடு... ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாஃப்........

டெல்லியில் இளம் பெண்ணை கொலை செய்த அல்தாஃப் பூனாவாலா பீர் குடித்துக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் உடல் பகுதியை 35 துண்டுகளாக வெட்டியதாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்த பார்ட்னர் அல்தாஃப் பூனாவாலா கடந்த மே 18-ம் தேதி கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கொலை 6 மாதத்திற்கு பிறகு தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலை தொடர்பாக டெல்லி போலீஸார் அல்தாஃபை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அல்தாஃப் அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான் என்கிறது போலீஸ். எனவே அவனுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். நீதிமன்றம் அல்தாஃப்பின் போலீஸ் காவலை மேலும் 5 நாள்கள் நீட்டித்து உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கொடுத்துள்ளது. போலீஸாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அடையாளம் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக முகத்தை எரித்துவிட்டதாக அல்தாஃப் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான். அல்தாப்பிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மே 18ம் தேதி ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, மறுநாள் காலையில் ஃபிரிட்ஜ், பிளாஸ்டிக் கவர், கத்தி போன்றவற்றை வாங்கி வந்துள்ளான்.

பின்னர் பீர் வாங்கி வந்து குடித்துக்கொண்டே உடலை பல துண்டுகளாக வெட்டியிருக்கிறான். அதோடு வெட்டும் போது அடிக்கடி நெட்பிளிக்ஸில் படமும் பார்த்துக்கொண்டே இக்காரியத்தை செய்தான். உடலை துண்டு துண்டாக வெட்டும் போது அடிக்கடி இடைவெளிவிட்டு அந்த நேரத்தில் பீர் குடிப்பது சிகரெட் புகைப்பது போன்ற வேலையில் ஈடுபட்டான். இடை இடையே இடைவெளி விட்டு விட்டு உடல் உறுப்புகளை வெட்டியதால் அதனை 35 துண்டுகளாக வெட்டி முடிக்க 10 மணி நேரம் எடுத்துக்கொண்டதாக அல்தாஃப் தெரிவித்துள்ளான்.

ஒவ்வொரு உடல் உறுப்பையும் வெட்டிய பிறகு அதில் ரத்தக்கசிவு இருக்ககூடாது என்பதற்காக நன்றாக கழுவி இருக்கிறான். உடல்களை வெட்டி முடித்த பிறகு தேவையான உணவை ஜொமோட்டோவில் ஆர்டர் செய்து நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டே சாப்பிட்டதாக தெரிவித்துள்ளான்' என்றார்.

ஷ்ரத்தாவை கொலை செய்து, உடலை பல துண்டுகளாக வெட்டிய பிறகு எந்த விதமான ரத்தக்கரையும் இருக்கக்கூடாது என்பதற்காக ரசாயான கலவையை பயன்படுத்தி சுத்தம் செய்திருந்தான். ஆனாலும் தடயவியல் அதிகாரிகள் கொலை நடந்த வீட்டை முழுமையாக சோதனை செய்ததில் சில தகவல்கள் கிடைத்திருக்கிறது. வீட்டை கழுவவும், உடல்களை சுத்தப்படுத்தவும் அதிகப்படியான தண்ணீரை அல்தாஃப் பயன்படுத்தி இருக்கிறான்.

அதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான தண்ணீர் பில் வந்துள்ளது. அதிகாரிகளுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு சமையல் அறையில் ரத்தக்கரை இருப்பதை தடயவியல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அல்தாஃப் வீட்டில் ரம்பம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல்களை வெட்டுவதற்கு அதனை அல்தாஃப் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வழக்கில் இந்த ரம்பம் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அல்தாஃப் வீட்டை ஆய்வு செய்த தடயவியல் அதிகாரி இது குறித்து கூறுகையில், அல்தாஃப் வீட்டில் இருந்த அனைத்து ஆதாரங்களை அகற்றிவிட்டான். பிரிட்ஜ் முதல் அனைத்து பகுதியை சுத்தமாக ரசாயானங்களைக் கொண்டு கழுவி இருக்கிறான். சமையல் அறையில் மட்டும் ரத்தக்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் சோதனைக்கு பிறகுதான் தெரியவரும்' என்று தெரிவித்தார். இவ்வழக்கில் இதுவரை போலீஸாருக்கு முக்கிய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. காட்டில் சில எலும்புகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. அல்தாஃப் டெல்லிக்கு வரும் முன்பு ஷ்ரத்தாவுடன் ஹிமாச்சல பிரதேசம்  உத்தரகாண்டிற்கு சென்று இருந்தார். எனவே அல்தாஃபை அங்கு அழைத்து சென்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர் போலீஸார்.


Comments