கோரளைப்பற்று மத்தியில் வறுமை ஒழிப்பு தின நிகழ்வு.......

 கோரளைப்பற்று மத்தியில் வறுமை ஒழிப்பு தின நிகழ்வு.......



சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (17) இன்று கோறளைப்பற்று மத்தியில் முன்பள்ளி சிறார்களின் போசனை மட்டத்தினை அதிகரிப்பதற்கான ஒரு வேலைத்திட்டமாக  சிறார்களுக்கு இலைக்கஞ்சி மற்றும் உணவு வழங்கும் நிகழ்வு ரிதிதென்ன  ஹிஸ்புல்லா முன்பள்ளி பாடசாலை மற்றும் ஜெயந்தியாய அல்ஹம்றா முன்பள்ளி பாடசாலைகளில் கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.                              

இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் அவர்களும், சமுர்த்தி வங்கிச்சங்க உதவி முகாமையாளர் எச்.எம்.அமீர் அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.சி.சாதிக்கீன் மற்றும் சாஹிரா அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்ரான ஜெயந்தன் மற்றும் முன்பள்ளி ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர். 









Comments