களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்......

 களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்......



சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவின் மகிழுர்முனை சில்வபெல்ஸ் முன்பள்ளி பாடசாலை சிறார்களுக்கு இலைக்கஞ்சிக் கோப்பை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில்,  சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் அவர்களின்  தலைமையில் (17) அன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறார்களின்  போசாக்கின்மையை குறைக்கும் பொருட்டு நாளாந்தம் முன்பள்ளி சிறார்களுக்கு போசணை மிக்க இலைக்கஞ்சிக் கோப்பை வழங்கும் வேலைத்திட்டம் களுதாவளை -01 வீனஸ் முன்பள்ளி மற்றும் துறைநீலாவணை - தெற்கு, 01 களம் முன்பள்ளி பாடசாலைகளிலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்  அருந்ததி சீவரெத்தினம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சோ.தமிழ்வாணி, எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர்  பா.துரைராசசிங்கம், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.தேவதாசன் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள்இ சமூக அபிவிருத்தி உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமுதாய அடிப்படை அமைப்பு), சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், போதகர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறார்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.










Comments