சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலய மாணவன் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு.......................

 சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலய மாணவன் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு..............



மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலய மாணவனான கோ.சியாறுஜன் 20 வயதுக்குட்பட்ட 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் 2ம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்று கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்று, தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளார்.

இதே வேளை அதே பாடசாலையின் மாணவியான த.தினோஜினி 18 வயதின் கீழான 400 மீற்றர் ஓட்டப்போட்டயில் 4ம் இடமும், 100 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் 4ம் இடமும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.  இம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் ம.சிவசுந்தரம் தலைமையில்    இடம்பெற்றுள்ளது. 

இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன்  வெற்றியீட்டிய மாணவர்களை சந்திவெளி சித்திவிநாயகர் ஆலயத்தின் முன் இருந்து பூமாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதுடன், பிரதான வீதி ஊடாக பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். 





Comments