வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஜப்பான் மொழிப்பயிற்சி ஆரம்பம்....

 வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஜப்பான் மொழிப்பயிற்சி ஆரம்பம்....


வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஜப்பான் மொழிப்பயிற்சி நெறியை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் இன்று (17)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் டேபா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் K.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற வந்தவர்களுக்கு ஜப்பான் நாட்டின் நிலைமைகளை பற்றி எடுத்து கூறியதுடன் எவ்வாறு நாம் இங்கு நடந்து கொள்ள வேண்டும் என்றும் இது ஒரு அரிய வாய்பாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தலைமைய தாங்கிய மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் உரையாற்றுகையில் இன்றை வறுமை ஒழிப்பு தினத்தில் ஒரு சிறந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதில் சமுர்த்தி பயனுகரிகள் உள்வாங்கப்பட்டு அவர்களின் வறுமை தன்மையை மாற்றுவதற்கான செயல்பாட்டில் ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பின் மூலமாக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜப்பான் மொழி வளவாளராக விரிவுரை வழங்க வந்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்கள் உரையாற்றுகையில் தான் ஜப்பான் நாட்டில் இரண்டு வருடங்கள் தங்கி கல்வி கற்றதாகவும், இதன் மூலம் தனக்கு ஜப்பான் மொழி கற்க கூடிய வாய்ப்பு கிட்டியதாகவும் தெரிவித்து, ஜப்பான் நாட்டிற்கு எந்த வேலைத்திட்டத்திற்கு செல்வதானாலும் கட்டாயம் ஜப்பான் மொழி கற்க வேண்டும் என்று குறிப்பிட்டதுடன், மிகவும் கண்டிப்பான நாடாக ஜப்பான் திகழ்கின்றதுடன் மனித நேயமிக்க நாடாகவும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இவ் ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான வேலைத்திட்டத்தை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களமும் இனைந்து செயற்படுத்தி வருகின்றது. இதன் போது வருகை தந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உயரதிகாரி திரு.சலீம் அவர்கள் உரையாற்றுகையில் தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் ஜப்பான் நாட்டிற்கு சென்று தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், சுமார் இலங்கை நாணயத்தின் படி 3 லட்சம் தொடக்கம் 5 லட்சம் வரையிலான உதியத்தை ஒருவர் மாதாந்தம் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவித்து, இதற்கு ஒவ்வொரு தரத்திலான ஜப்பான் மொழியை கற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 50 சமுர்த்தி பயனாளிகள் ஜப்பான் மொழிப்பயிற்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.










Comments