'வின்வோக் -202' (Vin walk)நடை பவனி இன்று (16)..........

  'வின்வோக் -202'  (Vin walk)நடை பவனி இன்று (16)..........



மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர  பாடசாலையின் 202 ஆவது ஆண்டு நிறைவையொட்டி  'வின்வோக் - 202' (Vin walk) எனும் பவனி (16) ஞாயிற்றுக்கிழமை  காலை நடைபெறவுள்ளதாக பாடசாலையின் அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பழமையானதும் புகழ் பூத்த ஒரு பாடசாலையாக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையானது திகழ்கின்றது. இப்பாடசாலை தனது 202வது ஆண்டு நிறைவைக் சிறப்பிக்கும் வண்ணம் வின்வோக் (Vin walk) எனும் பவனியை ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் பாடசாலையிலிருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு நகர்புறம் வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைய உளடளதாக தெரிவித்தார். இப்பவனியில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப்பாடசாலை தின நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் கௌரவ அதிதியாகவும் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு இத்தினத்தை சிறப்பாக கொண்டாடவுள்ளதாகவும் தெரிவித்ததோடு பாடசாலையின் பாரம்பரியம், பெருமைகள், சாதனைகள் என்பனவற்றோடு சமூகத்தின் தேவைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் இப்பவனி அமைவுள்ளதுடன்   சூழல் நேயமிக்கதாக இப்பவனி அமையப்பெறவுள்ளதாக தெரிவித்தார்.





Comments