பசுமைப்புரட்சி தாயக அறுவடை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் ......
பசுமைப்புரட்சி தாயக அறுவடை என்ற கருப்பொருளில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறை படுத்தப்படும் மரநடுகை வேலைத்திட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் தியாவட்டவான் அறபா வித்தியாலயம் மற்றும் கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி வங்கிச்சங்கம் என்பவற்றில் (22) அன்று நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரநடுகை வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், அறபா வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.இஸ்மாயில், விடய பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ருஹுனிதா மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment