கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 144 மாணவர்களுக்கு சிப்தொற புலமை பரிசில் வழங்கி வைப்பு....
சமுர்த்தி நிவாரனம் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு உதவியாக அவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சிப்தொற எனும் புலமைபரில் தற்போது வழங்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 2021-2022 கல்வி ஆண்டில் உயர்தரம் கற்கும் 144 மாணவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் சிப்தொற புலமை பரில் வழங்கி வைக்கட்டது. இக்கொடுப்பணவானது 22 மாதங்களுக்கு மாதாந்தம் 1500 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வானது (21) அன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்களும், கெளரவ அதிதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.சி.ரமீசா அவர்களும் கலந்து கொண்டனர். இத்துடன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத் அவர்களும், சமுர்த்தி வலய முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப் அவர்களும், பாடசாலை அதிபர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஐயூப்கான் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
Comments
Post a Comment