களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 'பசுமையானதொரு தேசம்' தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி 2022 நிகழ்வு.....

 களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 'பசுமையானதொரு தேசம்' தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி 2022 நிகழ்வு.....



மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் 29.03.2022 ஆகிய இன்று பசுமையானதொரு தேசம் தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கைப் புரட்சி ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் மு.ப 09.18 மணிக்கு எருவில் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரின் ஒருங்கிணைப்பாளர் T.தஜிவரன், மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர்  காயத்திரி ரமேஸ், உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் S.நிமல்ராஜ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி  ஜீவகுமார், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் K.உதயகுமார், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் S.தயாபரன்,  கருத்திட்ட முகாமையாளர் S.தமிழ்வாணி, எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் P.துரைராசசிங்கம், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.ஆனந்தமோகன், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர். S.ரவிந்திரன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திட்டமிடல், விவசாய போதனாசிரியர்கள், ஆலய தலைவர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி பயனுகரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











Comments