மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி....

 மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி....

2022ம் ஆண்டு பிறந்துள்ள தைப்பொங்கல் உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான ஒரு எதிர்காலமாக இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அமிர்கலாதேவி பாக்கியராஜா தம் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  

எத்தனையோ பிரச்சனைகளில் மத்தியில் நாம் இன்றைய கால கட்டத்தில் வாழ்ந்து வந்தாலும் இதுவும் கடந்து போகும் எனும் மனநிலையுடன் நாம் வாழக்கற்றுக் கொண்டுள்ளோம், என்பதை இத்தைப்பொங்கல் திருநாள் நமக்கு புலப்படுத்தியுள்ளதாகவும், ஒரு போதும் சேர்வடையாமல் வாழ பழகிக் கொள்வதால் நம் வாழ்வில் ஒளிமயமான ஒரு எதிர்காலம் நிச்சயமாக தென்படும் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அமிர்கலாதேவி பாக்கியராஜா தம் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் சகல சமுர்த்தி முகாமையாளர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.



Comments