கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் அருணலு கடன் வழங்கி வைப்பு.....
சமுர்த்தி திட்டத்தின் மூலம் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை மேம்படுத்தும் நோக்குடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு அருணலு கடன்களை வழங்கி அதன் மூலம் அங்கத்தவர்களுக்கான அரணலு கடன் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கியில் அன்மையில் உதவி பிரதேச செயலாளர் M.A.C. ரமீசா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முகாமைத்துவப்பணிப்பாளர் S.P.M ருமைஸ், வங்கி முகாமையாளர் S.ரவிச்சந்திரன், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment