சமுர்த்தி சௌபாக்கிய வாரத்தை முன்னிட்டு சேதனபசளை உற்பத்தி பற்றிய செயலமர்வு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில்...

 சமுர்த்தி சௌபாக்கிய வாரத்தை முன்னிட்டு சேதனபசளை உற்பத்தி பற்றிய செயலமர்வு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில்...


சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் சேதனை பசளை உற்பத்தி பற்றிய செயலமர்வும் பயிற்சியும் கண்ணகிபுரம் சமுர்த்தி பயனுகரியான அன்டனி தவமலர் இல்லத்தில் 06.07.2021 அன்று  காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. தற்போது நாடு பூராவும்  சௌபாக்கிய வார வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச் செயற்பாட்டின் முக்கிய விடயமாக தற்போது காணப்படும் சேதனை பசளை உற்பத்தி  தொடர்பாக விவசாய போதனா ஆசிரியர் S. சிறிகண்ணன் அவர்களும் விவசாய தொழில் நுட்ப உத்தியோகத்தர் T.தாவீஸ் அவர்களும் பயிற்சிநெறியையும் செயலமர்வையும் நடாத்தி வைத்தனர்.

சௌபாக்கிய வார 06.07.2021 மாலை நிகழ்வாக 02.00 மணிக்கு சமுர்த்தி 200000 குடும்பங்களை மேம்படுத்தல் வேலைத்திட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் விவசாய கருத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அறிவூட்டல் கருத்தரங்கும் இடம்பெற்றன இவ்வறிவூட்டல் கருத்தரங்கை விவசாய போதனா ஆசிரியர்  S.சிறிகண்ணன் அவர்கள் நடாத்தி வைத்திருந்தார்.









Comments