கொவிட் கொடுப்பனவு ரூ.5000.00 வழங்கி வைப்பு......

 கொவிட் கொடுப்பனவு ரூ.5000.00  வழங்கி வைப்பு......

(M.H.M.அன்வர்)

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நான்காம் கட்ட  கொவிட்  கொடுப்பவை அரசாங்கம் 02.06.2021 இன்று வழங்குமாறு அறிவுருத்தி இருந்தது. இதற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் நான்காம் கட்ட கொவிட் கொடுப்பனவு  02.06.2021 ஆகிய இன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் U. உதயசிறிதர் அவர்கனின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் கொடுப்பனவாது சமுர்த்தி பெறுவோர், சமுர்த்தி பெற தகுதியானோர், விஷேட தேவையுடையோர், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழில் இழந்தோருக்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பத்மா ஜெயராஜா அவர்களும், வங்கி முகாமையாளர்களான A.L.Z.பஹ்மி அவர்களும்,  S.H.M. முஸம்மில் அவர்களும் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்







Comments