மட்டு மாவட்டத்தில் 11வது கணணி மயமாக்கல் சமுர்த்தி வங்கியாக பழுகாமம் சமுர்த்தி வங்கி திறந்து வைப்பு......

 மட்டு மாவட்டத்தில் 11வது கணணி மயமாக்கல் சமுர்த்தி வங்கியாக பழுகாமம் சமுர்த்தி வங்கி திறந்து வைப்பு......

போரதீவு பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகாமம் சமுர்த்தி வங்கி கணணி மயமாக்கப்பட்டு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் அவர்களால் அன்மையில் திறந்து வைக்கப்பட்டது.

 போரதீவு பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் செல்வி.இ.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் M.S.பஸீர் அவர்களும் மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் G.F.மணோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி வங்கிப் பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதரன் மற்றும் சமுர்த்தி முகாயாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 29 சமுர்த்தி வங்கிகள் தம் சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றன பழுகபாமம் சமுர்த்தி வங்கி கணணி மயமாக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்ப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு விரைவான சேவையை சமுர்த்தி வங்கிகளால் இனிவரும் காலங்களில் வழங்க முடியும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டன. 























Comments