இரண்டாவது கிராமத்திற்கும் சமுர்த்தி ஆதார அட்டை வழங்கி வைப்பு.....
ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக்கு உட்பட்ட தன்னாமுனை கிராமத்திற்கும் சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனுகரிகளுக்கு சமுர்த்தி ஆதார அட்டை வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கு முன்பதாக பரீட்சாத்தமாக மயிலம்பாவெளி கிராமத்தில் இவ்வட்டைகள் வழங்கப்பட்டு வெற்றி அடைந்ததை தொடர்ந்து தன்னாமுனை கிராமத்திற்கும் இவ்வட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ் இலகுபடுத்தல் வேலைத்திட்டத்தை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் செயற்படுத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment