2018ம் ஆண்டிற்கான சமுர்த்தி வங்கிகளின் தரப்படுத்தலில் முதல் கட்ட ஆய்வு.......
இலங்கையில் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளையும் ஆய்வு செய்து தரப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது நாடு பூராவும் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளை தரப்படுத்தலுக்கு உட்படுத்தும் முதல் கட்ட ஆய்வு நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி மற்றும் மாவடிவேம்பு சமுர்த்தி வங்கிகளை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் குறுநிதிய இணைப்பாளர் ஜனாப்.ஐ.அலியார் தலைமையிலான குழு 25.07.2019 அன்று பார்வையிட்டது இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளர் திருமதி.நி.கிரிதரன் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திரு.கலாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2017ம் ஆண்டிற்கான தரப்படுத்தலில் அகில இலங்கை ரீதியாக மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி 4ம் இடத்தையும் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி 7ம் இடத்தையும் பெற்று சிறப்பு வங்கியாக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments
Post a Comment