தாமாக முன் வந்து முத்திரையை வழங்கிய சமுர்த்தி பயனுகரி.....
சமுர்த்தி முத்திரை எனக்கு வேண்டும் என் பிள்ளைக்கு வேண்டும் என் மருமகனுக்கு வேனும் என்று சொல்லும் இக்காலகட்டத்தில் தன் சமுர்த்தி முத்திரையை தனக்கு இனி வேண்டாம் என கூறி ஓர் சமுர்த்தி பயனுகரி தன் சமுர்த்தி முத்திரையை தாமாக முன் வந்து ஒப்படைத்த நிகழ்வு இன்று 24.05.2019 ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.
செங்கலடி – 01 கிராமத்தை சேர்ந்த வினோதினி சுரேஸ்குமார் அவர்களே தாமே முன் வந்து சமுர்த்தி முத்திரையை ஒப்படைத்துள்ளார். 2004ம் ஆண்டு முதல் இணைந்த இவர் சமுர்த்தி வங்கி மூலம் கடன் பெற்றுள்ளார். இவரின் கணவர் சாரதியாக பணிபுரிவதுடன் தமக்கு ஒரு பிள்ளை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் தனது சமுர்த்தி முத்திரையை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் நடராசா செந்தூரவாசனிடம் ஒப்படைத்தார் இதன் போது கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.தயாளினி ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலய உதவியாளர் நாகராசா பகீரதன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

Comments
Post a Comment