மக்களுக்கு விரைவாக செயற்படும் வன்னம் பணியாற்றுவோம்.....
மக்களுக்கு விரைவாக செயற்படும் வன்னம் இனிவரும் காலங்களில் பணியாற்றுவோம் என ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் நடராசா செந்தூர் வாசன் கடன்களை வழங்கி வைக்கும் போது தெரிவித்தார்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியூடாக 23 சமுர்த்தி பயனுகரிகளுக்கு கடன்களை வழங்கி வைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மற்றைய வங்கிகளை போல் விரைவாக சேவைகளை வழங்க விரும்புகின்றோம் ஆனால் எமது வங்கியில் ஆளனி பற்றாக்குறை காரணமாக தாமதமடைவதாகவும் இனி வரும் காலங்களில் விரைவாக செயற்படும் வன்னம் மக்களுக்கு சேவை செய்யவுள்ளதாகவும் 15 நாட்களுக்குள் ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்தில் 23 சமுர்த்தி பயனுகரிகளுக்கு கடன் வழங்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கடன்களை செலுத்த வேண்டும் எனவும் சங்க கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு செயற்படுமாறும் கூறினார்.
இந்நிகழ்வில் வலய உதவியாளர் நாகராசா பகீரதன், ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெகதீஸ்வரி ஜெயசீலன் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி கடன் லிகிதர் ஜெகனி சுந்தரகோல் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி காசாளர் பத்தியன் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment