மட்டக்களப்பு விகாராதிபதியை கண்டித்து ஏறாவூர் பிரதேச செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்....

மட்டக்களப்பு விகாராதிபதியை கண்டித்து ஏறாவூர் பிரதேச செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்....

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியை  கண்டித்தும் அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்ய வலியுறுத்தியும் செங்கலடி நகரில் வியாழக்கிழமை (25) ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்களின் ஏற்பாட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் பிரதேச செயலக ஊழியர்கள்இ சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலரும் கலந்துகொண்டனர்.


ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பிரதான வீதியில் தரித்து நின்று பின்  செங்கலடி சந்திவரை சென்று மீண்டும் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

கடந்த செவ்வாய்கிழமை (23) மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள தனியார் காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியமைக்கு மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரர் எதிர்ப்புத் தெரிவித்துஇ பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை தாக்க முற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
சம்பவ தொடர்பாக சமரசம் செய்வதற்காக குறித்த இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர்ப்பற்று  பிரதேச செயலாளர் ந.வில்லரெட்னத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அம்பிடியே சுமணரெத்த தேரர் பிரதேச செயலாளரை தாக்குவதற்கு முயற்சி செய்தார் இதையடுத்து பிரதேச செயலாளர் அவ்விடத்திலிருந்து வெளியேறி ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். தேரரின் இச்சம்பவத்தினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று கிராம உத்தியோகத்தர்.......... இன்று பிரதேச செயலாளர்..............நாளை ................... நீதியை நிலைநாட்டு, நல்லாட்சியில் ஏன் இந்த பாகுபாடு, அரச இயந்திரத்தை சீர்குலைக்காதே, வன்முறையைப் பிரயோகிக்காதே, வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம்இ அரச உத்தியோகத்தர்களை சுதந்திரமாக கடமையைச் செய்ய விடுஇ சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் நிறுத்துஇ மக்கள் சேவைக்கு மதிப்பளிஇ அரச உத்தியோகத்தர்களுக்கு இந்த நிலை என்றார் மக்களுக்கு? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


















Comments