மரணவீட்டில் வழங்கப்பட்ட சமுர்த்தி மரண கொடுப்பணவு.....

மரணவீட்டில் வழங்கப்பட்ட சமுர்த்தி மரண கொடுப்பணவு.....

செங்கலடி - 01 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த  சமுர்த்தி பயனுகரியான கருப்பையா சுப்பிரமணியம்  12.06.2018 அன்று ரமேஸ்புர கிராமத்தில் அமைந்திருக்கும் அன்னாரின் இல்லத்தில் மரணமடைந்தார். எனவே இவருக்கான சமுர்த்தி சமூக பாதுகாப்பு காப்புறுதி பணத்தை இவரது   மனைவியான சு.சசிலேகா என்பவரிடம் அவரின் இல்லத்தில்; வைத்து  செங்கலடி - 01 கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் க.கஜேந்திரன். அவர்களால்  வழங்கி வைக்கப்பட்டது.
  சமுர்த்தி திட்டத்தில் சமுர்த்தி முத்திரை பெறும் சமுர்த்தி பயனுகரிகளுக்கு இவ்வாரான கொடுப்பணவுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் இறப்பு நிகழும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் வழங்குவது தான்  சிறப்பம்சமாகும். எனவே இன்று (12.06.2018) நடந்த இந்த நிகழ்வுக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எடுத்துக் கொண்ட முயற்சியாலும் இதற்கு அனுமதியளித்த தலைமையக முகாமையாளராலும் இதை விரைவாக செயற்படுத்திய பிரதேச செயலாளராலும் குறித்த பயனுகரிக்கு முற்பணமாக 10000 (பத்தாயிரம்) ரூபாய் நண்பகல் 12.25 மணிக்கு வழங்கப்பட்டது.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com




Comments